கபிலர் கல்விக்கூடம் இலவசமாக நடத்தப்பட்டாலும் அதன் மூலம் பயன்பெறுபவர்கள் அச்சேவையை மதித்து நடப்பதற்காக பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்விதிமுறைகள் கல்விக்கூட நிர்வாகத்தை சீரமைக்கின்றது.
மாணவர்களுக்கான விதிமுறைகள்
கல்விக்கூடத்திற்கு உரிய நேரத்திற்கு சமூகமளித்தல்.
விடுமுறை எடுப்பதாயின் பெற்றோர் மூலமாக கல்விக்கூட நிர்வாகத்திற்கு அல்லது உரிய பாடத்திற்குரிய வளவாளருக்கு முற்கூட்டியே தெரியப்படுத்தல், இக்காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதும் முக்கியமானது, முன்னறிவிப்பிற்கு புலனம், தொலைபேசி அல்லது நேரடி முறைகளைப் பயன்படுத்தலாம்.
முன்னறிவிப்பு தராதவிடத்து கல்விக்கூடத்திற்கு அடுத்த தடவை வருகை தரும் போது ரூபாய் 50 ஐத் தண்டப்பணமாகச் செலுத்துதல்.
தொடர்பாடல் கையேடு எனும் தொடர்பாடல் உபகரணத்தை உரிய முறையில் பயன்படுத்தல்.
மாதாந்தப் பரீட்சை, தவணைப்பரீட்சை ஆகியவற்றுக்குத் தவறாது சமூகமளித்தல். வருகை தராதவிடத்து அம்மாணவருக்காக அச்சிடப்பட்ட வினாத்தாளின் இரட்டிப்பு பணத்தைத் தண்டமாக கல்விக்கூட நிர்வாகத்திற்குச் செலுத்த வேண்டும்.
கல்விக்கூடச் சொத்துகளுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது.
ஆசிரியர்களுக்கான விதிமுறைகள்
வகுப்பு நடைபெறுவதற்கு 5 நிமிடத்திற்கு முன் கல்விக்கூடத்திற்குச் சமூகமளித்தல்.
ஒழுக்கத்திலும் கட்டுப்பாட்டிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளல்.
பெற்றோர்களுடன் சிறந்த உறவைப் பேணுதல்.
குறித்த நேரத்திற்குள் மாணவர்களின் வரவுகளைப் பதிவு செய்தல்.
மாணவர்களின் தனிப்பட்ட விடயங்களையும் பல்வகைமையும் மதித்தல்.
மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் சம்பந்தமான குழறுபடிகளை கல்விக்கூட நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தல்.
மாதாந்த வளவாளர் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளல்.
கல்விக்கூட நிர்வாகத்தால் பகிரப்படும் பணிகளை தாமதமின்றி செய்து முடித்தல்.
பெற்றோர்களுக்கான விதிமுறைகள்
மாணவர்களின் கல்விக்கூட வருகையை உறுதி செய்தல்.
மாணவர்களை உடை நாகரீகத்துடன் பாடசாலைக்கு அனுப்புதல்.
மாணவர்களின் குறிப்பேடுகளை நாளாந்தம் அவதானித்து அவர்களின் நிலையை அறிதல்.
மாதாந்தப் பெற்றோர் கூட்டத்திற்குத் தவறாது கலந்து கொள்ளுதல்.
கல்விக்கூட நிர்வாகத்துடனும் வளவாளர்களுடனும் சிறந்த உறவைப் பேணுதல்.
கல்விக்கூடச் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டுமென மாணவர்களுக்கு ஊக்கமளித்தல்.
தொடர்பாடல் கையேட்டை அவதானித்து வீட்டில் மாணவர்களின் கற்றலை உறுதிப்படுத்துவதற்காக அதில் கையொப்பமிட்டு அனுப்புதல்.