சமீபத்திய செய்திகள்
  • எங்களை பின்தொடரவும்

இலவசக் கல்வி

கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையினால் கட்டணமின்றி வழங்கப்படும் இலவசக் கல்வி.

விளையாட்டுப் பயிற்சி

வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுதல்.

தகுதியான வளவாளர்கள்

ஒவ்வொரு பாடத்திற்கும் அத்துறையில் புலமை வாய்ந்த வளவாளர்கள்.

கபிலர் கல்விக்கூடம்

கபிலர் கல்விக்கூடமானது 2022 ம் ஆண்டிலிருந்து இன்று வரை தனது இலவசக்கல்வி எனும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. எங்கள் நோக்கம், ஒவ்வொரு மாணவரும் தங்கள் முழு திறனை அடைய உதவுவதாகும்.

 

எங்களைப் பற்றி

புலம்பெயர் தமிழர்களின் அனுசரணையுடன் எமது தொப்புழ் கொடி உறவுகளின் கல்வி அடைவுமட்டத்தை மேம்படுத்துவதற்காக கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவை எனும் அமைப்பின் கீழ் கபிலர் கல்விக்கூடம் எனும் செயற்றிட்டத்தை செயற்படுத்துகிறோம்.

 
About Image

கபிலர் கல்விக்கூடத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

கல்விக்கூடத்தை வெற்றிகரமாக நடாத்திச் செல்வதற்கான நடைமுறைகள்.

கணினி, பள்ளி மேலாண்மை முறைமை மற்றும் திறன் வகுப்பறை (Smart Classroom) ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்கால தொழிநுட்ப உலகிற்கு முகங்கொடுக்கக்கூடிய தமிழ் சமுதாயத்தை உருவாக்கல்.
ஒவ்வொரு மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் வரவு ஆகியவற்றைத் தனிப்பட்ட ரீதியில் கவனித்தல், அறிவித்தலின்றி வருகை தராத மாணவர்களிடம் தண்டப்பணம் அறவிடுதல், மூன்று நாட்களுக்கு மேல் அறிவித்தலின்றி விடுமுறை எடுக்கும் மாணவர்களை கல்விக்கூடத்திலிருந்து நிறுத்துதல், தொடர்பாடல் கையேட்டின் மூலம் மாணவர்களின் நாளாந்த செயற்பாடுகளையும் பெற்றோர் தொடர்பையும் பேணல்.
ஒவ்வொரு மாதமும் மாணவர்களுடைய முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக பெற்றோர் சந்திப்பு நடத்தப்படுகிறது.

கற்பிக்கப்படும் பாடங்கள்

இலங்கை அரசுப் பாடத்திட்டத்திற்கமைய எமது கல்விக்கூடத்தில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது .

சாதனைகள்

கபிலர் கல்விக்கூடமானது இலக்கு வைத்து சில சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

20

புலமைப் பரிசில் சித்தி எய்தியவர்கள்

21

தகுதி வாய்ந்த வளவாளர்கள்

50

உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்கள்

154

மொத்த மாணவர்கள்

எங்கள் திட்டங்கள்

மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி மற்றும் பாடநிரல் திட்டங்களை வழங்குகிறோம்.

 

கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள்

நாடகங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கிறோம்.

தொழில்நுட்ப பயிற்சி

கணினி மற்றும் டிஜிட்டல் கற்றல் மூலம் மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்கிறோம்.

சமூக ஈடுபாடு

சமூக சேவை திட்டங்கள் மூலம் மாணவர்களின் பொறுப்புணர்வை வளர்க்கிறோம்.